சிறுவர்மணி

 நடுவோம் மரங்கள் நாளும்!

DIN

நாளும் மரங்கள் நட்டால்
 நாட்டில் நிலவும் குளிர்ச்சி
 நீளும் தண்ணீரைப் பெருக்கு
 நிறையும் எங்கும் வளர்ச்சி
 
 பற்பல இடங்களில் முன்னோர்
 பயன் தரும் மரங்களை நட்டார்!
 விற்பனை நோக்கில் பின்னோர்
 வெட்டி விற்றே கெட்டார்!
 
 தோப்புத் தோப்பாய் மரங்கள்
 தொடர்ந்து வளர்ந்து செழித்தால்
 காப்பாய் இருக்கும் நமக்கு!
 கடுகி மழையும் பொழியும்
 
 நிலத்தில் வெப்பம் மகுந்தால்
 நிலவும் வறட்சி எங்கும்
 பலவாய் மரங்கள் நிறைந்தால்
 பற்பல் வளங்கள் தங்கும்!
 
 நிழலும் பயன்தரு பொருளும்
 நித்தம் வழங்கும் மரங்கள்
 உழவும் தொழிலும் செழிக்க
 உதவும் மழையைக் கொடுக்கும்!
 
 நடுவோம் மரங்களை நாளும்
 நலத்துடன் அவற்றைக் காப்போம்!
 விடுமே வறட்சி நம்மை
 விளையுமே எங்கும் செம்மை!
 
 முத்து முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT