கேள்வி: படங்களில், வங்கி விளம்பரங்களில் காணப்படும் மற்றும் சிறுவர்களுக்குக் கொடுக்கப்படும் உண்டியல் (Piggy Bank) பெரும்பாலும் குட்டிப் பன்றி வடிவத்தில் இருப்பதற்கு என்ன காரணம்? பதில்:உண்டியல்கள் பன்றி வடிவில் செய்யப்படுவதற்குக் காரணம் அவற்றின் பெயரே PIGGY BANK என்பதால் தான்.
18-ஆம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்து நாட்டு மக்கள், சில்லறை நாணயங்களை, முழுவதும் மூடப்பட்ட, சிறு துளை கொண்ட களிமண் ஜாடியில் சேர்த்து வைத்தனர். அந்த ஜாடி முழுவதும் நாணயங்கள் நிறைந்த பிறகு, அது உடைக்கப்பட வேண்டியிருந்ததால், அது PYGG என்னும் தரம் குறைந்த களிமண்ணால் செய்யப்பட்டது. PYGG களிமண்ணால் செய்யப்பட்ட ஜாடி
PYGG JAR என்று அழைக்கப்பட்டது.
இந்த PYGG JAR என்பதே பின்னாட்களில் PYGG BANK என்றானது. பெயரின் காரணத்தையே மறந்து விட்ட உண்டியல் செய்வோர் அதைப் பன்றியின் உருவத்திலேயே செய்ய ஆரம்பித்தனர். சேமிப்புப் பழக்கமும் பெரியவர்களிடமிருந்து சிறியோர்களின் கைக்கு மாறிவிட்டதனால் பன்றி வடிவம் சிறியவர் களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அது இன்றும் அப்படியே தொடர்கிறது.
பன்றி அதிகமாகக் குட்டிகள் போட்டு, தனது இனத்தைச் சீக்கிரம் பெருக்கி விடும். அதே போல, பன்றி வடிவ உண்டியலில் காசுகளைப் போட்டால் அவை பெரு வெள்ளமாகப் பெருகும் என்றுகூட மக்கள் நினைத்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.