முகப்பு
சிறுவர்மணி

கடி

""எதுக்கு துணிக் கடைக்கு டான்ஸ் ஆடிக்கிட்டே வர்றீங்க?''""நீங்கதானே ஆடி வந்தா தள்ளுபடின்னு விளம்பரம் செஞ்சுருக்கீங்க!''

Updated On : 8 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM

""எதுக்கு துணிக் கடைக்கு டான்ஸ் ஆடிக்கிட்டே வர்றீங்க?''
""நீங்கதானே ஆடி வந்தா தள்ளுபடின்னு விளம்பரம் செஞ்சுருக்கீங்க!''

கே.விஜயலட்சுமி, திருப்பத்தூர்.


""பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லு!''
""இன்னிக்கு "அபிநவ்' ஸ்வேதாவை சந்திச்சு, ""நீ செய்யறது சரியா?'... ன்னு கேட்டான்!.... அதுக்கு ஸ்வேதா,.......''
""நிறுத்துங்க பாட்டி!..... நான் சீரியல் கதையைக் கேட்கலே!.... சிறுவர் கதையோ, புராணக் கதையோ சொல்லு!''

Advertisement

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்
திருநெல்வேலி டவுன் - 627006.

""எதுக்கு,   "ஏ, பி, சி, டி'  யை ரொம்ப சத்தமா சொல்றே?''
""அதுவா?...., நான் பெரிய "ஏ, பி, சி, டி'  சொல்றேன்!''

ஏ.நாகராஜன், 
பம்மல், சென்னை  -  600075.



""எதுக்கு ரசம் கொதிக்கும்போது ரெண்டு ஸ்பூனை அதுக்குள்ளே போடறே?''
""நீங்கதானே நான் மிளகாய்ப் பொடியைக் காமிச்சு,  அளவு கேட்டப்போ, ரெண்டு ஸ்பூன் கூடப் போடச் சொன்னீங்க!''

பர்வதவர்த்தினி, 
சென்னை.

""இந்த ஊர் எல்லை எங்கே முடியும் தம்பி?''
""அடுத்த ஊர் ஆரம்பத்திலே முடியும்!''

ஏ.நாகராஜன், 
சென்னை.

""ஏண்டி, சாம்பார்ல உப்பு போடலே?''
""போட்டேனே!...... கரைஞ்சிருக்கும்!''

கே.இந்து குமரப்பன், 
விழுப்புரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.