கடி
""எங்க அங்கிள், ""என் காக்கா மிருது'' விலே ஒர்க் பண்றாரு!''""புரியலேடா!''""...."மைக்ரோசாஃப்ட்'லே வேலை செய்யறாரு!''
""எங்க அங்கிள், ""என் காக்கா மிருது'' விலே ஒர்க் பண்றாரு!''
""புரியலேடா!''
""...."மைக்ரோசாஃப்ட்'லே வேலை செய்யறாரு!''
அ . உமர்,
கடையநல்லூர்.
""இவனுக்கு விளையாட்டுத்தனம் அதிகம்!''
""என்ன பண்றான்?''
""விளையாட வேண்டிய நேரத்தில் படிக்கிறான்!''
ஏ.நாகராஜன்,
பம்மல்.
""ஒண்ணு 100 தடவையும், ரெண்டு 100 தடவையும் எழுதியிருக்கியே ஏண்டா?''
""ஒண்ணு, ரெண்டு நூறு வரை எழுதிக்காட்டுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!''
அ.காயத்ரிதேவி,
சென்னை - 600019.
""..."வாட் ஈஸ் தி மீனிங்...' னா என்ன அர்த்தம்?''
""கரெக்ட்!..... சரியா சொல்லிட்டே!''
நா.வினோத் குமார்,
அரக்கோணம் - 632510.
""அங்கே என்னடா நாலு பசங்க சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க?''
""நமக்கு எதுக்குடா அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்!''
""ஆளுக்கு இரநூத்தம்பது, இரநூத்தம்பதா பிரிச்சுக்க வேண்டியதுதானே!''
கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.
""எங்க பாட்டி ஆர்கானிக் லிப்ஸ்டிக் போடுவாங்கடா!''
""என்னடா சொல்றே?''
""வெற்றிலை, பாக்கு, போடுவாங்கடா!''
நெ.இராமன்,
பொழிச்சலூர்.