முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!  65: குடைக் கொடை!

குடையின்றி வெளியில் சென்றால் மழை வந்தால் உடை நனையும்!பையில் புத்தகம் நனையும்!

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:21 PM
பகிர்:

குடையின்றி வெளியில் சென்றால் 
மழை வந்தால் உடை நனையும்!
பையில் புத்தகம் நனையும்!
உடல் நனையும்! மிகக் குளிரும்!

பள்ளியில் மாணவர் வருகை 
மிகக் குறையும்! அன்றைக்குப் 
பாடங்கள் நடந்துவிட்டால் 
கல்விச் சுமை கூடும்! கவலை வரும்!

பதினாறு பள்ளிகளில் இருந்த
ஆயிரத்தைந்நூறு பிள்ளைகள் 
நிலை கண்டார் ஓர் ஆசிரியை
பெயர் "வசந்தா சித்ரவேல்!' 

தொடக்கப்பள்ளிக்கு வரும் 
மாணவர் எண்ணிக்கை பெருக 
எண்ணி மழைக்குக் குடைகள் 
வாங்கித் தந்திட எண்ணி உடனே 
 
ஆயிரத்து அறுநூறு குடைகள்
 வாங்கித்தந்தார் பிள்ளைகளுக்கு
அனைவரும் பயன் அடைந்தார் - பள்ளிக்கு 
வருகையும் உயர்ந்தது உடனே!

"கஜா' என்ற புயலின் போது
பாதித்த மக்களுக்கு
பலரிடம் நிதியைச் சேர்த்து 
பாங்குடனே உதவி செய்தார்

ஐம்பது லட்சம் பொருட்கள் 
புயலால் வருந்தியோரின் 
புனர் வாழ்வுக் காக ஈந்தார்!
வாழிய வசந்தா சித்ரவேல்! 

கணவரும் ஓர் ஆசிரியர்!
இரு மகள்கள் உண்டிவர்க்கு!
அவர்களும் சமூக நலத் தொண்டில்
ஆர்வமாய் செய லாற்றுகிறார்!

துயர் துடைக்கும் இக்குடும்பம்
உடல் நலம், கல்வி, செல்வம்
உலகினிலே உயர்வு, பெறவே
உளமார வாழ்த்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.