மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சியோ, தூற்றும்போது துக்கமோ அடைய வேண்டாம்.
முடிந்து போன விஷயத்தைப் பற்றி வருத்தம் கொள்ளுதல் வீணாகும்.
முடிவுக்கு வந்த பகையைத் தூண்டி மீண்டும் வளர்ப்பது நல்லதல்ல.
பேச்சை அடக்குவது மிகக் கடினம். அது மிகச் சுருக்கமாகவும், பொருட் செறிவுடன் இருப்பது அவசியம்.
ஆயுதங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். கொடிய வார்த்தைகளால் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை.
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ விரும்புபவன் அதற்குரிய கடமைகளை இளமையிலேயே செய்து முடிக்க வேண்டும்.
அகந்தை, தீய எண்ணங்கள், வீண் பேச்சு, அதிக கோபம், சுயநலம், நம்பிக்கை துரோகம், ஆகிய ஆறும் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.