முகப்பு
சிறுவர்மணி

கடி

""உயிரினப் பூங்காவில் இவரை ஏன் உள்ளே விட மறுக்கறாங்க?''""எலியை எலிப் பொறியில் பிடித்து இங்கே வைக்க முடியுமான்னு அனுமதி கேட்கிறாராம்..''

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:


""உயிரினப் பூங்காவில் இவரை ஏன் உள்ளே விட மறுக்கறாங்க?''
""எலியை எலிப் பொறியில் பிடித்து இங்கே வைக்க முடியுமான்னு அனுமதி கேட்கிறாராம்..''

என். பர்வதவர்த்தினி,
சென்னை 75.

""இந்த ரோடு மதுரைக்குப் போகுமா?''
""ரோடெல்லாம் போகாது!... நாமதான் போகணும்!''

ஆர்.சுப்பு,
திருத்தங்கல்.

""அதோ போறாரே,.... அந்த அங்கிள்,... "திட்ட  அலுவலரா' இருக்காரு!''
""திட்டறதுக்கெல்லாம்கூட  அலுவலர்கள் இருக்காங்களா என்ன?''

பொ.பாலாஜி,  
அண்ணாமலை நகர்.

""தாத்தா ஓல்டு மேன் இல்லியா,.... அவரு ஓல்ட் சென்ஸôத்தான் பேசுவாரு!''
""அப்போ நீ?''
""நியூசென்ஸôத்தான் பேசுவேன்! ''

குமாரி கே.விஜயலட்சுமி, 
திருப்பத்தூர் - 635601.

""என்னடா இது?.... இந்தக் கிளி வெளியே வந்து சீட்டை எடுக்கமாட்டேங்குது!''
""அது குவாரன்டைன்லே இருக்குது போலிருக்கு!''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
 திருநெல்வேலி டவுன்.

""செய்யாத தப்புக்கு அம்மாகிட்டே இன்னிக்குத் திட்டு வாங்கினேன்!''
""அப்படியா?''
""ஆமாம்...., இன்னிக்கு அம்மா வீட்டைபெருக்கச் சொன்னாங்க.... நான் பெருக்கலை!''

ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்,
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.