வலியறிதல்
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி
பொருட்பால் - அதிகாரம் 48 - பாடல் 7
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
- திருக்குறள்
செய்ய வேண்டிய நன்மைகளைச்
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்து
தன்னலமாய் வாழ்பவனால்
எந்தப் பயனும் இல்லையே
நன்மை செய்யாத செல்வத்தால்
மீள முடியாத துன்பங்கள்
மேலும் மேலும் வந்திடும்
அதனால் செல்வம் அழிந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்