கடி
""உலக அதிசயங்கள் ஏழுதானே,.... நீங்க என்ன எட்டு சொல்றீங்க?''""க்ளாஸ்லே நீ தூங்காமல் முழிச்சிக்கிட்டு இருக்கியே!.... அதுதான் எட்டாவது?''
""உலக அதிசயங்கள் ஏழுதானே,....
நீங்க என்ன எட்டு சொல்றீங்க?''
""க்ளாஸ்லே நீ தூங்காமல் முழிச்சிக்கிட்டு இருக்கியே!.... அதுதான் எட்டாவது?''
வி.ரேவதி, தஞ்சாவூர்.
""எங்க குடும்பத்திலே எங்க சித்தப்பா, பெரியப்பா, எங்கப்பா எல்லாருக்கும் பொறியலைவிட கூட்டுதான் ரொம்பப் பிடிக்கும்!
""ஓ!.... இதுதான் கூட்டுக் குடும்பமா!''
கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம் - 605602
""ஏண்டா சைக்கிள்ளே காத்தைப் பிடுங்கி விட்டே?''
""நீதானேப்பா ட்யூபிலே காத்து இருக்கான்னு செக் பண்ணச் சொன்னே!.... இருக்குப்பா!.... புஸ்ஸ்ஸ்ஸýனு சத்தம் கூட வந்தது!''
கே.ஆர்.ஜெயக்கண்ணன்,
கவற்குளம் தேரிவிளை.
""என்னடா இது டெய்லி ஷீட்லே தேதியைக் கிழிக்கறதே இல்லியா?.... அப்படியே இருக்கே!''
""நீங்கதானே ஒரு நாளைக்கூட வீணாக்கக்கூடாதுன்னு சொன்னீங்க!''
பி.சி.ரகு, பள்ளிச்சேரி,
விழுப்புரம் - 605107.
""ஏன் இன்னும் படிக்காம விளையாடிக்கிட்டு இருக்கே?''
""க்ளாஸிலே புஸ்தகத்தை தொலைச்சுட்டேன்பா!''
""கதை விடாதே!.... ஆன்லைன் கிளாஸிலே எப்படிடா தொலையும்?
ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி.
""ஒண்ணுவிட்ட சித்தப்பா மேலே ஏண்டா கோபமா இருக்கே?''
""நான் வெடிக்க வெச்சிருந்த ராக்கெட்லே ரெண்டு விட்டுட்டாருடா!''
பி.சி.ரகு,
பள்ளிச்சேரி.