விடுகதைகள்
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள்...
1. பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள்...
2. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை...
3. கவி பாடும் கட்டழகி, காடு சுற்றும் கருப்பழகி...
4. இங்கே குத்துப்பட்டவன் வாயைத் திறக்கிறான்...
5. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்ட ஒருவர் கண் பட்டு
உடைந்ததாம் மண்டபம்..
6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை... களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை... சண்டைக்குச் செல்லும் ஆயுதமும் இல்லை...
7. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான்...
8. சின்னத் தம்பிக்குத் தொப்பியே வினை...
9. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும்...
விடைகள்
1. சீப்பு
2. நாக்கு
3. குயில்
4. கடிதம்
5. தேன்கூடு
6. சோடா
7. கடல் அலை
8. தீக்குச்சி
9. தொலைபேசி