கார்மேகம் சூழ்ந்திங்கு
கனமழையைப் பொழியட்டும்!
மழையாலே பல மரங்கள்
மண் மீது வளரட்டும்!
பள்ளத்தில் நீர் சேர்ந்து
பலருக்கும் உதவட்டும்!
நிலமெல்லாம் நெற்பயிர்கள்
நிறைவாக வளரட்டும்!
பள்ளிக்குப் பிள்ளைகள்
நனையாமல் போகட்டும்!
படிப்புடனே விளையாட்டைப்
பாங்காகக் கற்கட்டும்!
பிழையின்றி எழுதுகின்ற
பயிற்சியுமே கிடைக்கட்டும்!
வாழ்க்கை நெறி அறிந்துணர
வள்ளுவத்தைக் கற்கட்டும்!
கற்றவர்கள் அளவின்றிக்
கண்முன்னே பெருகட்டும்!
எற்றைக்கும் உண்மை மட்டும்
எல்லோரும் பேசட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.