முகப்பு
சிறுவர்மணி

அணில்!

அணிலே அணிலே  வா வாஅன்புடன் அழைக்கிறேன் ஓடி வா!

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:


அணிலே அணிலே  வா வா
அன்புடன் அழைக்கிறேன் ஓடி வா!

கிளைக்குக் கிளை தாவுறியே
கொஞ்சம் கூடப் பயமில்லையா?

பஞ்சு போன்ற முதுகினிலே 
பாங்காய்க் கோடுகள் போட்டது யார்?

பழங்களைக் கடித்துத் துப்புறியே
கொட்டையிலேதான் ருசியுள்ளதோ?

எட்டத்தில் அமர்ந்து கொஞ்சுகிறாய்
பக்கத்தில் வந்தால் ஓடுவதேன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.