முகப்பு
சிறுவர்மணி

கால்பந்தில் அசத்தும் குட்டிப் பிரபலம்!

சர்வதேச அளவில் கால்பந்து அரங்கில் ஜாம்பவான்களாக திகழும், மெஸ்கி, ரொனால்டோ போன்ற பெரிய ஆட்டக்காரர்களே வியக்கும் வண்ணம் ஒரு குட்டிப் பையன் கால்பந்தில் சாதனைகள் நிகழ்த்துகிறான்! 

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

சர்வதேச அளவில் கால்பந்து அரங்கில் ஜாம்பவான்களாக திகழும், மெஸ்கி, ரொனால்டோ போன்ற பெரிய ஆட்டக்காரர்களே வியக்கும் வண்ணம் ஒரு குட்டிப் பையன் கால்பந்தில் சாதனைகள் நிகழ்த்துகிறான்! 
ஏழு வயதே நிரம்பிய அராட் ஹுசைனி என்ற பெயருடைய இந்தப் பையன் கால்பந்தில் செய்யும் மாயாஜாலங்களை பலரும் வியப்புடன் நோக்குகின்றனர்!
சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் அராட் ஹுசைனியின் சாகச வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் சிறுவனின் வியத்தகு பயிற்சிகள், கால்பந்தை மற்றவர்களிடமிருந்து கடத்தும் லாவகம், இலக்கைக் குறி வைத்து பந்தை அடிக்கும் திறமை ஆகியவை தொகுத்து வெளியிடப்பட்டது!
அதைப் பார்த்து ஏராளமானோர் அராட் ஹுசைனிக்கு ரசிகர்களாகி விட்டார்கள்! உலகின் முன்னணி கால்பந்து வீரர்களுக்கு இணையாக தனக்கு ரசிகர்களை உருவாக்கிவிட்டான் அராட் ஹுசைனி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.