கடி
""ரயிலுக்கு ரெண்டு தண்டவாளம் போட்டிருக்காங்களே ஏண்டா?''""இது கூடத் தெரியாதா?.... ஊருக்குப் போறதுக்கு ஒண்ணு!.... ஊரிலேயிருந்து வர்றதுக்கு ஒண்ணு!''
""மகாத்மா காந்தியின் மனைவியின் பெயர்?....''
""ஜெயந்தி!...''
""என்னடா உளர்றே?''
""...."காந்தி ஜெயந்தி' .... ன்னுதானே சொல்றோம்!''
எம் . அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
""அப்ளிகேஷனை டெல்லியிலேதான் ஃபில்லப் பண்ணனுமா சார்?''
""... அப்படியெல்லாம் இல்லையே,.... எதுக்கு அப்படிக் கேக்கறே?''
""ஃபில் அப் இன் கேபிடல்னு எழுதியிருக்கே சார்!''
அமுதா,
திருச்சி.
""நாய்களையே பிடிக்கலே!....''
""ஏன்?''
""அதை முனிசிபாலிடியிலதான் கேக்கணும்!''
மு . பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி - 614715
""ரயிலுக்கு ரெண்டு தண்டவாளம் போட்டிருக்காங்களே ஏண்டா?''
""இது கூடத் தெரியாதா?.... ஊருக்குப் போறதுக்கு ஒண்ணு!.... ஊரிலேயிருந்து
வர்றதுக்கு ஒண்ணு!''
உ . அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.
""டேய் ராமு, உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?""
""அஞ்சு சார்!''
""என்னது?...''
""உ...யி...ர் மூணு எழுத்து,.... மெ...ய் ரெண்டு எழுத்து..... மொத்தம் அஞ்சு!.... சரியா சார்!''
ஆர். சுப்பு,
திருத்தங்கல் - 626130.