சிறுவர்மணி

கடி

""10 நிமிஷத்துல 10 மைலைக் கடந்து வந்தியா? எப்படிடா?''""ஆமான்டா... நான் வர்ற வழியில 10 மயில்கள் இருந்ததே... அதைத்தான் கடந்து வந்தேன்''

DIN

""10 நிமிஷத்துல 10 மைலைக் கடந்து வந்தியா? எப்படிடா?''
""ஆமான்டா... நான் வர்ற வழியில 10 மயில்கள் இருந்ததே... அதைத்தான் கடந்து வந்தேன்''

எஸ்.எஸ்.லக்ஷா,
பொறையார் -609 307.

""பரிட்சையில அதியமான் கோட்டை எங்கிருக்குன்னு கேட்டிருக்காங்களே... 
நீ பதில் எழுதலையா?''
""தெரியலப்பா...''
""கோட்டை விட்டுட்டியா?''

தீ.அசோகன்,
சென்னை.

""என்றும் பதினாறுன்னு என்னை வாழ்த்தாதீங்க தாத்தா...''
""ஏண்டா பேராண்டி?''
""அப்படி வாழ்த்தினா... நான் மேஜராகவே முடியாது''

ஏ.நாகராஜன்,
பம்மல்.

""உங்க அண்ணன் பேட், பந்தைத் தொடாமலேயே கிரிக்கெட் ஆடுவானா... என்ன சொல்ற நீ...?''
""அவன் அம்பயரால்ல இருக்கான்''

ஆனந்த் வைத்தியநாதன்,
சென்னை.

""ஏண்டா கடவுளுக்கு சொல்ற ஸ்லோகத்தை இவ்ளோ மெதுவா சொல்றே...?''
""அதுதான் "ஸ்லோ'கம் ஆச்சேம்மா....''

ஆர்.பூஜா,
சென்னை -600 001.

""ஏண்டா கணக்குல வெறும் பத்து மார்க்குதான் வாங்கியிருக்கே?''
""நீதானப்பா போன தடவை நான் 25 மார்க் வாங்கினப்ப, கூட 10 மார்க் வாங்கியிருந்தா பாஸ் பண்ணியிருக்கலாம்னு சொன்ன... அதான் 10 வாங்கியிருக்கேன்...''

எம்.பார்த்தசாரதி,
சென்னை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT