சிறுவர்மணி

ஏசுநாதர்

அன்னை மரியாள் அன்று செய்தஅருமைத் தவத்தினாலே - உலகில்அவதரித்தார் ஏசு - நல்ல

வே.இரா.சிவஞானவள்ளல்

அன்னை மரியாள் அன்று செய்த
    அருமைத் தவத்தினாலே - உலகில்
அவதரித்தார் ஏசு - நல்ல
    அன்பை எங்கும் விதைப்ப தற்கே
அங்கு மிங்கும் சென்றார் - இன்பம் 
    எங்கும் நிலைக்கச் செய்தார்!

தொண்டு செய்வ தற்கே உலகில்
    தோன்றி வந்தார் ஏசு - அன்பை 
ஊன்றி வந்தார் ஏசு - தோன்றும் 
    எண்ணில் லாத துன்ப மெல்லாம் 
ஏற்றுக் கொண்டார் ஏசு - எனவே
    போற்றப் பெற்றார் ஏசு!

கூவிக் கூவி அழைத்து மக்கள்
    குறைகள் கேட்டார் ஏசு - அவர்
குறைக ளைந்தார் ஏசு - நாட்டில் 
    பாவி கள்தம் பாவம் போக்கப் 
பரனைத் தொழுதார் ஏசு - பரனைச்
    சரண டைந்தார் ஏசு!

சின்னச் சின்னக் கதைகள் மூலம்
    சிந்தை தூய்மை செய்தார் - மக்கள் 
சிந்தை எல்லாம் நிறைந்தார் - யாரும் 
    என்றும் கர்த்தர் வழியில் செல்ல
ஏற்ற வழியைச் சொன்னார் - அவரைப்
    போற்றும் வழியைச் சொன்னார்!

என்ன பாவம் செய்த போதும் 
    ஏசு பொறுமை காத்தார் - அவர்
மாசு மருவைத் தீர்த்தார் - ஆழ்ந்த 
    அன்பால் பாவம் செய்த பேரை 
ஆண்ட வாமன் னிப்பாய் - என்று 
    வேண்டிக் கொண்டார் ஏசு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் உயர்ந்து ரூ.90.27ஆக நிறைவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

SCROLL FOR NEXT