முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர் !

உலகில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு. அவர் ஒரு சமயம் லண்டனுக்குப் போயிருந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

உலகில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு. அவர் ஒரு சமயம் லண்டனுக்குப் போயிருந்தார். இங்குள்ள விடுதியில் தங்குவதற்கு நடுத்தர வசதி கொண்ட ஓர் அறையினைப் பதிவு செய்தார்.  அவர் யார் என்பதை அறிந்த விடுதி நிர்வாகி, "உலகப் புகழ் பெற்ற கோடீசுவரராகிய தாங்கள் மிகச் சாதாரணமான அறையைப் பதிவு செய்கிறீர்களே?' என்று மிகுந்த வியப்புடன் கேட்டார்.

அதற்கு ஃபோர்டு, "எனக்குப் போதுமான வசதிகள் அனைத்தும் இந்த அறையில் இருக்கும்போது ஆடம்பரமான அறையை எடுத்து ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?' என்று கூறினார்.

உடனே விடுதி நிர்வாகி, "சென்ற மாதம் உங்கள் மகன் வந்தார். அவர் ஆடம்பரமான அறையில்தான் தங்கினார்' என்று கூறினார். 

ஃபோர்டு சிரித்தபடி, "ஓ... அப்படியா! அவன் கோடீஸ்வரனின் மகன், ஆடம்பரமான தங்குமிடம் அவனுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், நான் மிகச் சாதாரண நடுத்தரக் குடும்பத் தந்தைக்குப் பிள்ளையாகப் பிறந்தவன்; எனக்கு இந்த வசதிகளே போதும்' என்றார்.

எதற்குப் பழகிவிடுகிறோமோ, அதுவே வாழ்க்கையின் தேவையாகிவிடுகிறது. தேவைகள் ஆடம்பர எல்லையைத் தொட வேண்டும் என்பது அவசியமில்லை. 

("ஆன்றோர் வாழ்வில் அரிய காட்சிகள்' நூலிலிருந்து...)

முழு கட்டுரையைப் படிக்க →