முகப்பு
சிறுவர்மணி

சிரி.. சிரி..

""என்னது இது?.... பேப்பரைச் சுருட்டி மேஜையிலே வெச்சிருக்கே?''""சுருக்கமா எழுதுகன்னு சொன்னீங்களே!....பிரிச்சுப் பாருங்க,....சுருக்கமா இருக்கும்!''

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

""என்னது இது?.... பேப்பரைச் சுருட்டி மேஜையிலே வெச்சிருக்கே?''
""சுருக்கமா எழுதுகன்னு சொன்னீங்களே!....பிரிச்சுப் பாருங்க,....சுருக்கமா 
இருக்கும்!''

நெ.இராமன்,
சென்னை - 600074

""என் ஃப்ரெண்டோட  நாணயம் தவறிப்போச்சு!''
""அப்புறம்?''
""கீழே விழுந்த அஞ்சு ரூபா நாணயத்தைத் தேடி, நான் கண்டுபிடிச்சுக் 
கொடுத்துட்டேன்!''

ஆர்.ஆனந்த்,
விருதுநகர்.



""உங்க வீட்டுக் கோழிக்கு மாஸ்க் மாட்டியிருக்கியே ஏன்?''
""பறவைக் காய்ச்சல் வராம இருக்கத்தான்!''

ஆர்.சுப்பு, 
திருத்தங்கல் - 626130

""சின்ன வெங்காயம் வாங்கிட்டு வாடான்னா பெரிய வெங்காயம் வாங்கிட்டு வந்திருக்கியே?....''
""ஹூக்கும்!.... சின்ன வெங்காயம் வாங்கினா என்னத்தானே உரிக்கச் சொல்றே!...''

எஸ்.திருமலை,
சென்னை - 600042.

""தூங்கறவர் வீட்டுக் கதவைத் தட்டினால், அவர் ஜன்னலைத் திறப்பாரா?... 
கதவைத் திறப்பாரா?''
""கதவை!....''
""அதான் கிடையாது!.... முதல்லே 
கண்ணைத்தான் திறப்பார்!''

எம்.ஏ.நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

"நேத்து கனவிலே, செல்ஃபோன் பார்த்துக்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஆஃப் ஆயிடுச்சுடா!''
""நீ,  "ரீசார்ஜ்'.... பண்ணியிருக்கமாட்டே!.... அதான்!''

பொ. பாலாஜி, 
அண்ணாமலை நகர் - 608 002.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.