விடுகதைகள்
முள்ளுக்கோட்டைக்குள், முத்துக் குவியல்கள்...
1. முள்ளுக்கோட்டைக்குள், முத்துக் குவியல்கள்...
2. முத்தும் முத்தும் குதித்து விளையாட, எங்கள் ராஜா மகிழ்ந்து விளையாட... அது என்ன?
3. முதலிரண்டையும் கூட்டினால் பதினொன்று வரும் பழம்...
4. கண்ணுக்குக் கருப்பழகி, நாவிற்கு இனிப்பழகி... இது என்ன?
5. கீழே விழுந்தால் கருப்பு, வாயில் போட்டால் சிவப்பு... இது என்ன?
6. உச்சியிலே கிரீடம், உடம்பெல்லாம் கண்கள்... இவன் யார்?
7. உமி போல் பூ பூக்கும், சிமிழ் போல காய் காய்க்கும்...
8. பூத்தபோது மஞ்சள், காய்த்த போது சிவப்பு, பழுத்த போது கருப்பு. இது என்ன?
9. காயில் ஒட்டியவன் பழத்தில் பிரிந்து விடுவான்... இவன் யார்?
10. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை...
விடைகள்
1. பலாப்பழம்
2. மாதுளம்பழம்
3. ஆரஞ்சுப்பழம்
4. நாவல் பழம்
5. கருப்பு திராட்சைப்பழம்
6. அன்னாசிப்பழம்
7. நெல்லிக்காய்
8. பேரீச்சம்பழம்
9. புளியங்காய் - பழம்
10. எலுமிச்சம்பழம்