சொல் ஜாலம்
உலகிலேயே அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவை எது? அதைப் பற்றிச் சற்று விளக்குங்களேன்...
கேள்வி: உலகிலேயே அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவை எது? அதைப் பற்றிச் சற்று விளக்குங்களேன்...
பதில்: உலகில் வேகமாகப் பறக்கக்கூடிய பறவைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவையை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு கண்டுபிடித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி, பெரிக்ரைன் ஃபால்கன் (Peregrine Falcon) என்ற பருந்து இனப் பறவைதான் உலகிலேயே அதிவேகமாகப் பறக்கக்கூடிய பறவை என்று அறிவித்துள்ளனர்.
இது அதிவேகமாக மேலே எழும்பும், அதேபோல கீழிறங்கும்போதும் இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும்.
சரி, இதனுடைய பறக்கும் வேகம்தான் என்ன? மணிக்கு 320 கி.மீ.வேகத்தில் இது பறக்கும். உலகின் அதிவேக விலங்கான சிறுத்தையின் வேகம்கூட மணிக்கு 112 கி.மீ.தான். இந்தப் பறவை அண்டார்டிகாவைத் தவிர மீதி எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் பறவை கோல்டன் ஈகிள் என்ற பறவை. இதன் வேகம் மணிக்கு 241 கி.மீ.