முகப்பு
சிறுவர்மணி

நூல் புதிது!

37 சிறார் பாடல்களின் அருமையான தொகுப்பு! பாட்டுடன் பல்வேறு தகவல்களை இசையுடன் வழங்கியிருக்கிறார் ஆசிரியர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:


ஊஞ்சல்

(சிறார் பாடல்கள்)

ஆசிரியர் - பெ. பெரியார்மன்னன்
பக்கம் - 54
விலை - 75/-
37 சிறார் பாடல்களின் அருமையான தொகுப்பு! பாட்டுடன் பல்வேறு தகவல்களை இசையுடன் வழங்கியிருக்கிறார் ஆசிரியர்.

உதாரணம் : பூமியின் கண்டங்கள் பாடலில், ...."மலையின் உச்சி சிகரமாகும்,.... நீர்வளம் மிகுந்தது சோலையாகும்,.... நீர்வளம் அற்றது பாலையாகும்.... போன்ற வரிகள் சிறுவர்கள் மனதில் ஆழமாக அற்புதத் தகவல்களாக பதியும்!.... மேலும் உருவங்கள் பாடலில், வட்ட வடிவம், முட்டை வடிவம், அரை வட்டம், நீள் சதுரம், கனசதுரம் போன்றவற்றை பாடலில் என்னமாய் வடிவமைத்திருக்கிறார் பாடலாசிரியர்! அவசியம் குழந்தைகளிடம் இருக்க வேண்டிய புத்தகம்! வெளியிட்டோர் - எக்ஸ்பிரெஸ் பப்ளிஷிங் நெ. 8, 3 - ஆவது கிராஸ் தெரு, சி.ஐ.டி. காலனி, மைலாப்பூர், சென்னை - 600004. பேசி - 9600969118

வான் மழை

மழலையர் பாடல்கள்

ஆசிரியர் - கவிஞர் விண்மீன்
பக்கம் - 80
விலை - ரூ 80/-

மழை,.... துன்பம் துடைத்திடு,.... தவளை,.... நிலா,.... வாழும் வழி,..... முதலிய 64 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. தமிழக ஆறுகள் பாடலில், காஞ்சியில் பாலாறு,.... மதுரையிலே வைகை நதி,.... திருச்சியிலே காவேரி,.... திருநெல்வேலி தாமிரபரணி போன்ற ஆறுகளின் தகவல்கள் நினைவில் நிற்கும்படி பாடலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். வெளியிட்டோர் - மஞ்சு பதிப்பகம், எண் 4, கிராமணி தெரு, இரண்டாம் கட்டளை, கோவூர் அஞ்சல், சென்னை - 600128. பேசி - 9941390563

கெட்டிக்கார குட்டித் தவளை
(சிறுவர்களுக்கான கதைகள்)


பக்கம் - 32
விலை - ரூ 100/-
12 சின்னஞ்சிறு கதைகளின் தொகுப்பு. கற்பனை வளத்தோடு நீதி போதனைகளோடு எழுதப்பட்ட மிக அருமையான கதைகள்! உண்மையான நண்பன் கதையில் நாய்க்குட்டி புஜ்ஜி அம்மா பேச்சை மீறக்கூடாது என்று உறுதியெடுக்கும் முடிவு மிக அருமை! சுவாரசியமான புத்தகம்! வெளியிட்டோர் - சாரல் வெளியீடு, 131/1, முனியப்பன் தெரு, கீழ அம்பிகாபுரம், திருச்சி - 620004. கைபேசி - 7358968695

புத்த ஜாதகக் கதைகள்

ஆசிரியர் - எ.சோதி
பக்கம் - 256
விலை - ரூ 150/-

புத்தரின் முற்பிறவிக் கதைகள். அனைத்தும் சுவாரசியமானவை. கருத்துச் செறிவு நிறைந்தவை. நீதி போதனை செய்பவை! 70 சிறுகதைகளின் மிக அருமையான தொகுப்பு! குழந்தைகள் கீழே வைக்கவே மாட்டார்கள்! வெளியிட்டோர் - நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605003. கைபேசி - 9345450749.

பொங்கலோ பொங்கல்
(பாட்டி சொல்லும் கதை வரிசை - 3)

ஆசிரியர் -காந்தலட்சுமி
சந்திரமெளலி
பக்கம் - 48
விலை - ரூ 60/-

பொங்கல் பண்டிகை பற்றி பற்பல சுவையான அனுபவங்களை பேரன் பேத்திகளுடன் பகிர்ந்துகொள்கிறார் இந்தக் கதை சொல்லிப் பாட்டி! அவசியம்
குழந்தைகள் படித்துச் சுவைக்க வேண்டிய புத்தகம்! வெளியிட்டோர் - செங்கைப் பதிப்பகம், பிளாட் 17, 10 - ஆவது தெரு, சக்தி நகர், ஆலப்பாக்கம், வல்லம், செங்கல்பட்டு - 603003. கைபேசி - 9443331393.

மாயப் போர்வையும் பீமா பாமாவும்!


ஆசிரியர் - கோமாளி மாமா (ஜெ.ராதை)
பக்கம் - 112
விலை - ரூ 125/-
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார், சூதும், வாதும் வேதனை செய்யும், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் முதலான 32 கதைகளின் தொகுப்பு! அத்தனையும் நல் முத்துக் கதைகள்! சசியின் ஓவியங்களும் அருமையாக உள்ளன. படங்களுடன் கதைகள் படிக்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. வெளியிட்டோர் - நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17 , பேசி: 044-24334397

முழு கட்டுரையைப் படிக்க →