பொன்மொழிகள்
பணிவும், எளிமையும் இருந்தால் தெய்வம் தேடி வரும்.
பணிவும், எளிமையும் இருந்தால் தெய்வம் தேடி வரும்.
- பைபிள்
நல்லோர் மனம் நடுங்கும்படியான செயல்களைச் செய்தல் கொடிய பாவம்.
- வள்ளலார்
தினமும் கடவுளை வணங்குபவனுக்கு அருள் உணர்வு நிச்சயம்.
- வள்ளலார்
தன்னைச் சரிப்படுத்திக்கொள்பவனே, உலகைச் சரிப்படுத்தத் தகுதியானவன்.
- சாய்பாபா
உறவாடும் உதடுகளைவிட, உதவும் கரங்கள் புனிதமானவை.
- அன்னை தெரசா
திறமையாகப் பேசுவதைவிட, இங்கிதமாகப் பேசுவது சிறந்தது.
- பேகன்
ஆசைக்காகப் பொருள் தேடுவதைவிட , பொருளுக்கேற்ப ஆசைகளைக் குறைத்துக் கொள்வது மிக நல்லது.
- அரிஸ்டாட்டில்
இயற்கையைப் போற்றுதல் கடவுளை வழிபடுவதற்குச் சமம்.
- ரவீந்திரநாத் தாகூர்
கர்வத்தின் பிடி இறுகினால், அறத்தின் பிடி நழுவுகிறது!
- பாரதியார்
அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனம். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்