பேதைமை
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை
பொருட்பால் - அதிகாரம் 84 - பாடல் 7
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
- திருக்குறள்
அறிவில்லாத ஒருவனுக்கு
ஏராளமாய்ச் செல்வம் வந்தால்
ஏமாற்றுவோர் பயன் பெறுவார்
உறவினர்கள் பசித்திடுவார்
Advertisement
உற்றார்க்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்
உதவிகள் ஏதும் செய்யமாட்டார்
அந்நியர் நன்றாய் அனுபவிப்பார்
சொந்த பந்தம் பசித்திருக்கும்
- ஆசி.கண்ணம்பிரத்தினம்