பொன்மொழிகள்
மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
- இங்கர்சால்
பிறருடைய குற்றங்களை நாம் கவனித்துக்கொண்டே இருந்தால் அதே குற்றம், குறைகள் நாளடைவில் நம்மிடம் தொற்றிக் கொள்ளும்.
- இங்கர்சால்
சாந்தம், அன்பு, தயை, கருணை இவை தங்குமிடம்தான் கடவுள்.
- யாரோ
சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும் நல்ல புத்தகங்களால் திறக்கப்படுகின்றன.
- யாரோ
நல்ல அனுபவங்கள் கிடைக்க நீண்ட நாள்கள் ஆகலாம். நல்ல புத்தகங்கள் அவற்றை சீக்கிரமாக அளிக்கின்றன.
- யாரோ
பண்பை வழங்குவதால் புகழ் சேர்க்கப்படுகிறது.
- பேயர்டு டெய்லர்
அதிகப் பேச்சு கவனிப்பைக் குறைத்துவிடும்.
- ஏ.வி.பிரவுன்
குழந்தைகள் துன்பங்களை மறக்கச் செய்கின்றன. எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்குவதற்கும் குழந்தைகள் வழி வகுக்கின்றன.
- யாரோ
கோபம் நுழையும்போது பகுத்தறிவு வெளியேறிவிடுகிறது.
- தாமஸ் புல்லர்
உயர்ந்த சிகரங்களில் மனிதர்கள் ஏறிவிடலாம். ஆனால் அவற்றில் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது.
- ஷேக்ஸ்பியர்