முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

செலவுகளைக் குறைப்பதும் செல்வந்தனாகும் வழியில் ஒன்றாகும். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:


செலவுகளைக் குறைப்பதும் செல்வந்தனாகும் வழியில் ஒன்றாகும். 
- பொய்யாமொழி

துன்பங்கள் வருமுன்பே மனத்தைத் திடப்படுத்திக் கொள்பவன் அறிவுள்ளவன். 
- வள்ளலார்

மற்றவன் குணம் எப்படி என்று ஆராய்வதைவிட, உன் குணம் எப்படி என்று ஆராயத் தொடங்கினால் ஞானம் துளிர்க்க ஆரம்பித்துவிடும். 
- குன்றக்குடி அடிகளார்

தனிமரம் தோப்பாகாது. ஆனால் அது தோப்பாவதற்குத் துணை புரியம். 
 - அருணகிரிநாதர்

அனைவரின் இதயங்கள் ஒரே மாதிரியிருந்தாலும் எண்ணங்கள் பல மாதிரி 
இருக்கின்றன.
- லியோ டால்ஸ்டாய்

உழைப்பு என்பது உண்மையுடன் பிழைக்கும் வழியாகும்.
- லெனின்

அலைமோதும் கடலில் அல்லி மலராது. உறுதியில்லா மனதில் அன்பு வளராது. 
- வேர்ட்ஸ் வொர்த்

சாந்தமாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான். 
- இராமானுஜர்

பயன் கருதிச் செய்யப்படும் வேலை, தொண்டாகாது! 
- திரு.வி.க.

உண்மையை நேசி! பிழைகளை மன்னிப்பாய்! 
- வால்டேர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.