முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

நிம்மதியாகப் படுத்தவுடன் உறங்குவாய்.  அதிகாலை சுறுசுறுப்பாய் எழுந்திருப்பாய். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

நிம்மதியாகப் படுத்தவுடன் உறங்குவாய்.  அதிகாலை சுறுசுறுப்பாய் எழுந்திருப்பாய். 
-யஜுர் வேதம் 

ஏழைகளை நேசிக்கக் கற்றுக்கொள்ளுதல் ஆன்மிகத்தின் விளைவு ஆகும். 
- போப்

ஒழுக்கமாக ஜீவிப்பவனின் போதனைகள் சக்தி வாய்ந்தது. 
- செர்வான்டஸ்

மற்றவர்களிடம் நாம் செலுத்தும் தோழமை உணர்வே சாதனை செய்யத்  துணை  புரியும். 
- இந்திரா காந்தி

சக்தியுள்ள சொற்கள் அதிகமான பொருளடக்கம் உள்ளவை.  
-எஸ்ரா பவுண்ட்

நல்ல கவிஞனின் இதயத்தில் தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. 
- வேர்ட்ஸ் வொர்த்

பூட்டியிருக்கும் இதயங்களைக் கூட அன்பு சாவியின்றித் திறந்து விடுகிறது. 
-யாரோ

விசாலமான எண்ணங்களில் மானுடம் இளைப்பாறுகிறது 
- யாரோ

அறநெறியே மனித குலத்தின் விலை மதிப்பில்லாத சொத்தாகும் 
- ஹென்ரி ஆடம்ஸ்

மனம் ஒருமித்து வேலை செய்யாத ஒருவரும் வெற்றியை அடைய முடியாது. 
- அப்துல் கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.