முகப்பு
சிறுவர்மணி

நேரு மாமா நம் மாமா!

நே ரு மாமா நம் மாமா நேர்த்தி மிக்க ஒருமாமாபாருக்குள்ளே அவருக்குபண்டிதர் என்ற பேருண்டு

Updated On : 13 நவம்பர், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:38 PM

நேரு மாமா நம் மாமா 
நேர்த்தி மிக்க ஒருமாமா
பாருக்குள்ளே அவருக்கு
பண்டிதர் என்ற பேருண்டு

கல்வி கேள்வி கலைஞானம் 
அள்ளி இறைக்கும் பெருஞ்செல்வம்
அவருக்குண்டு அறிவோமே
கற்றுத் தேர்ந்த பெருஞானி

பெருமை மிக்க நம்நாட்டின்
பிரதமராக வீற்றிருந்து 
அருமையாக நம்நாட்டை 
ஆண்ட பெருமை அவர்க்குண்டு!

Advertisement

பஞ்ச சீலக் கொள்கையினை
பாரே போற்றக் கொடுத்ததுவும்
அஞ்சா நெஞ்ச உரத்தோடு
அணிகள் சேரா நின்றதுவும்

புகழைச் சேர்த்தன அவருக்கு
பெருமை வந்தது நாட்டுக்கு!
பொழியும் அன்பு கருணையினால்
புன்னகை புரிந்தார் நம்நேரு

அன்னார் பிறந்த பொன்னாளை
அன்புப் பிள்ளைகள் இந்நாளில்
குழந்தைகள் தினமென உளமார
கொண்டாடி மகிழ்வர் எந்நாளும்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.