ஒழுக்கமுடைமை
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
அறத்துப்பால் - அதிகாரம் 14 - பாடல் 8
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
- திருக்குறள்
இனிமையான வாழ்க்கைக்கும்
மகிமையான வாழ்க்கைக்கும்
நல்லொழுக்கம் வித்தாகும்
நன்மைகளைச் சேகரிக்கும்
Advertisement
தீய செயல் செய்பவரை
தீமைகளே தேடிவரும்
துன்பம் வந்து மொய்த்திடும்
துயரக் கடலில் தள்ளிடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்