சிறுவர்மணி

தமிழழகன்

DIN

குன்றசைந்து வருவதுபோல் 
யானையாரே! - எழிற் 
கோலங்கொண்டு தெருவில் வரும் 
யானையாரே!

நின்று நின்று காசு வாங்கும் 
யானையாரே! - உம்மை
நெருங்கி நின்று பார்க்கட்டுமா 
யானையாரே!

காடுவிட்டு நாடு வந்த 
யானையாரே! - அந்தக் 
காரணத்தைச் சொல்லிடுவீர் 
யானையாரே!

பாடுபட்டு உழைப்பதற்கு 
யானையாரே - நன்கு
பழக்கப்பட்டுப் போனீரோ 
யானையாரே! 

தும்பிக்கையை நீட்டி நீட்டி 
யானையாரே! - தலை 
தொட்டுத் தொட்டு வாழ்த்துகின்றீர் 
யானையாரே! 

தம்பி, தங்கை உம்மைக் கண்டு 
யானையாரே! - மிகவும் 
சத்தமிட்டுச் சிரிக்கின்றார் 
யானையாரே!

சர்க்கசிலே வித்தை காட்டி 
யானையாரே - பெருஞ்
சாதனைகள் செய்கின்றீரே 
யானையாரே! 

சொர்க்கம் உமக்குக் காடன்றோ 
யானையாரே! - அதைத் 
தொலைத்துவிட்டு இங்கேன் வந்தீர்
யானையாரே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT