சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அண்மையில் பிரபலமாக இருக்கும் சட்டம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. இனிப்புக் குழல்...
2. நேரம் காட்டும் கருவி...
3. மிகவும் நல்ல மனிதனை இப்படி அழைப்பார்கள்...
4. ஆங்கில ஆண்டின் இரண்டாவது மாதம்...
5. சப்பாத்தி செய்ய உதவும் இந்த தானியத்துக்கு வால் உள்ளது...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. தேன்குழல்
2. கடிகாரம்
3. உத்தமன்
4. பிப்ரவரி
5. வால்கோதுமை
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : குடிஉரிமை