முகப்பு
சிறுவர்மணி

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். 

ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள 
எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிராமப்புற வீடுகளில் உள்ள இடம் 
ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...


1.  ஆட்டோமேடிக் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நல்ல தமிழ்ச் சொல்...
2. இந்தக் கிணறு ஒன்றுக்கும் உதவாது...
3.  ஒவ்வொரு பள்ளியிலும் இந்தச் சாலை இருக்கும்...
4. கல்விக்கு அதிபதி...
5.  வயதான பிறகு தோலில் ஏற்படுவது...


விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. தானியங்கி  
2. பாழ்கிணறு  
3. வாசகசாலை  
4. சரஸ்வதி  
5. சுருக்கம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : தாழ்வாரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.