சிறுவர்மணி

அன்பு!

தளவை இளங்குமரன்

அன்புதான் அகில உலகம்
அனைத்தையும் ஆளும் சக்தி!
அன்புதான் அனைவர் உளமும்
அணைத்துயிர் வாழும் சக்தி!

அன்புதான் ஆசை, கோபம்,
அகந்தையை அடக்கும் சக்தி!
அன்புதான் பாசம், நேசம்
அகத்தினில் படைக்கும் சக்தி!

அன்புதான் அமைதி, பொறுமை,
அகிம்சையை அளிக்கும் சக்தி!
அன்புதான் வலிமை, உறுதி,
அறநெறி வளர்க்கும் சக்தி!

அன்புதான் இறைக்கும் கிணறாய்
அரும்புனல் சுரக்கும் சக்தி!
அன்புதான் இரக்கம், கருணை
அறிந்ததைப் பெருக்கும் சக்தி!

அன்புதான் கவலை, துயரம்
அடைவதைத் தடுக்கும் சக்தி!
அன்புதான் பிறரின் சுமையை
அகற்றக்கை கொடுக்கும் சக்தி!

அன்புதான் துன்பக் கடலின்
அலைகளைக் கடக்கும் சக்தி!
அன்புதான் இன்பக் கரையை
அடைத்திடக் கிடைக்கும் சக்தி!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT