புத்தாண்டே நீ வருக!
புத்தாண்டே நீ வருக!பொன் வசந்தமே சூழ்க!சித்திரை நிலவு ஒளிர்கசூழ்ந்த இருளே அகல்க!
புத்தாண்டே நீ வருக!
பொன் வசந்தமே சூழ்க!
சித்திரை நிலவு ஒளிர்க
சூழ்ந்த இருளே அகல்க!
ஆடவர் ஆயுள் நீள்க!
அறமே எங்கும் நிறைக!
தேடி செல்வம் குவிக
தெய்வத்தின் அருள் மல்க!
உலகம் அமைதி காண்க
ஒப்பில்லா நேயம் வளர்க
பல்கலை தேறிய இளைஞர்
பாரினில் ஒங்கி உயர்க!