முகப்பு
சிறுவர்மணி

அறிவோம்

குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது.  "தோட்ட விலங்கு' என்ற மீனுக்கு  நீந்தத் தெரியாது.

Updated On : 30 ஏப்ரல், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

.
குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது.  "தோட்ட விலங்கு' என்ற மீனுக்கு  நீந்தத் தெரியாது. பபூன் குரங்குக்கு மரம் ஏறத் தெரியாது.  பெங்குவின் பறவைக்கு பறக்கத் தெரியாது.  ஹம்பிக் பறவைக்கு நடக்கத் தெரியாது. ஹைனா செந்நாய்களுக்குக் குரைக்கத் தெரியாது.

தமிழ்நாட்டில் சில புலவர்கள் ஊர்ப் பெயரோடு  வாழ்ந்தார்கள்.  அவர்கள் பெயரா அல்லது ஊரா என்று வேறுபாடு காண முடியாது. அவர்களின் விவரம்: அரிசில் கிழார், ஆலந்தூர்க்கிழார், ஆவூர்க்கிழார், இடைக்குன்றூர்கிழார்.

திருநாவுக்கரசர் முழங்கால் வரைதான் ஆடை அணிந்திருந்தார்.  வள்ளலார் மேனி முழுதும் மறையும்படி ஆடை அணிந்திருந்தார்.

Advertisement

புகழ்ப் பெற்ற எழுத்தாளர்கள் சிலரது வாழ்க்கை ரகசியங்கள்: எமிலி ஜோலா ஒரு ஏழைப் பங்காளன். ஜி.கே.செஸ்டர்டன் ஞாபக மறதிக்காரர்.  மார்க் வெயின் ஒரு நாத்திகர் மட்டுமல்ல; சாப்பாட்டுப் பிரியர்.  ஆஸ்கார் ஒயில்ட்,  எட்கர் ஆலன்போ ஆகிய இருவரும் சூதாட்ட பிரியர்கள். குடிக்கச் சொன்ன உமர்கய்யாம் குடிக்காத கவிஞர் . 

கவிஞர் வில்லியன் பிளேக் ஓவியரும்கூட!  எழுத்தாளர் ஷெல்லி எதையாவது தின்றுகொண்டேதான் எழுதுவார்.  எழுத்தாளர் சர் வால்டர் ராலே ஒரு மாலுமியும் கூட! எர்னஸ்ட் ஹைமிங்வே மீன்பிடித் தொழிலில் வல்லவர். மாப்பசான் ஆபாசமாக எழுதி,  மனநோய் பாதிக்கப்பட்ட ஓராண்டில் இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.