சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார். 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை பண நெருக்கடியில் இருந்ததால், டாக்டர் சாந்தா 1955 முதல் 1958 வரை மூன்று ஆண்டுகள் ஊதியம் வாங்காமல் பணியாற்றினார்.
இந்தியாவின் முதல் தொழில்நுட்பக் கல்லூரியை ஏற்படுத்தியவர் ஜி.டி.நாயுடு. தமிழ்நாட்டில் முதலில் தனியார் பேருந்துகளுக்காகத் தனியாகப் பணிமனையை ஏற்படுத்தியவரும் அவர்தான். கன்னியாகுமரியில் இருந்து சென்னை அவரது எந்தப் பேருந்திலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கும் இறங்கலாம் என்ற நூதனப் பயணச்சீட்டு முறையையும் அமல் செய்தவர், ஒரே கொய்யா மரத்தில் ஒவ்வொரு சுவை கொண்ட பல மரங்களை உருவாக்கியவர் என்று பலவித சாதனைகளை நிகழ்த்தியவரும் அவர்தான்.
அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பதவியேற்ற புதிதில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது மனைவி, மூன்று வயதுச் சிறுவனுடன் வந்திருந்தார். சிறுவன் ஒபாமாவிடம், ""நான் ஒரு கேள்வி கேட்கலாமா?'' என்று கேட்க, "" கேள் தம்பி'' என்றார் ஒபாமா.
""உங்கள் தலைமுடி என் தலைமுடி போல் இருக்கிறதே? அதை பார்க்க வேண்டும்'' என்றான். இதற்கு ஒபாமா சிறுவனின் உயரத்துக்கேற்ப தலைகுனிந்து தனது தலைமுடியைக் காண்பித்தார். இந்தப் புகைப்படத்தை எடுத்து, ஒருவர் வெளியிட அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
புயலுக்கு முதலில் பெண்களின் பெயர்களைத்தான் வைத்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்பே ஆண்களின் பெயர் வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், தலைவர்கள், மதம், மதத்தலைவர்களின் பெயர்களை புயல்களுக்கு வைக்கக் கூடாது என்பது விதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.