தென் துருவத்தில் தபால் நிலையம்..
பிரிட்டனில் உள்ள ஒரு சேவை நிறுவனம் தென் துருவத்தில் தபால் நிலையம் நிர்வகிக்கவும், அங்கு பழம்பொருள்காட்சி நிலையத்தை நிர்வகிக்கவும் "ஆள்கள் தேவை' என்று விளம்பரம் செய்துள்ளன.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:06 PM
பிரிட்டனில் உள்ள ஒரு சேவை நிறுவனம் தென் துருவத்தில் தபால் நிலையம் நிர்வகிக்கவும், அங்கு பழம்பொருள்காட்சி நிலையத்தை நிர்வகிக்கவும் "ஆள்கள் தேவை' என்று விளம்பரம் செய்துள்ளன.
யு.கே. ஹெரிடேஜ் (அண்டார்டிகா) என்ற அந்த நிறுவனம் வேலையில் சேருபவர்களுக்குப் பயிற்சியை அளித்துவிடும். தபால் நிலையம், கடை மேலாளர், பொது நிர்வாகம் உள்பட பல பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலையில் அமர்த்தப்பட உள்ளவர்களுக்கு மாதம் 1,250 முதல் 1,800 பவுன்ட் ஊதியம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கும்.
Advertisement