முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா: பெரிய தொழிற்சாலைகளின் புகை போக்கிகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன?

பெரிய தொழிற்சாலைகளின் புகை போக்கிகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன?

Updated On : 18 ஜூன், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:38 AM


கேள்வி: பெரிய தொழிற்சாலைகளின் புகை போக்கிகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன?

பதில்: நிறைய தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வெப்பம் தேவைப்படுகின்றது. இதற்காக அவற்றில் பலவித பொருள்களை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறார்கள். சிலவற்றில் மரக்கட்டைகள், சிலவற்றில் நிலக்கரி, சிலவற்றில் பெட்ரோலியம் போன்றவை.

இவை அனைத்துமே எரிக்கப்படும்போது மிக அதிக அளவில் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்லைட்) வெளியிடுபவை. உங்களுக்கு நன்றாகச் தெரியும். கரியமில வாயு  மிகுந்த விஷத்தன்மை கொண்டது என்றது. அதை நாம் அதிகமாக சுவாசித்தால் உடல்நலக் கேடு உண்டாகும். உயரம் குறைவான புகை போக்கிகள் இருந்தால் நாம் சுவாசிக்கும் காற்றில் அவற்றிலிருந்து வரும் கரியமில வாயு எளிதாகக் கலந்து விடும். இந்தக் காற்றை நாம் சுவாசித்தால் நமக்குத்தான் கேடு.

Advertisement

மேலும் கரித்துகள்கள் வேறு இந்தப் புகை போக்கிகள் வழியே வெளி வரும். இந்தத்துகள்கள் நமக்கு மூச்சுத் திணறல் ஆகிய உபாதைகளைத் தரக்கூடியவை. புகை போக்கிகள் மிக உயரமாக இருந்தால் வானில் உயரத்தில் இந்தக் கரியமில வாயுவும் கரித்துகள்களும் விண்வெளியில் கலந்து விடும். அப்போது நமக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால்தான் புகைபோக்கிகள் மிக உயரமாக அமைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.