முகப்பு
சிறுவர்மணி

மின்னல் - கவனம் தேவை...

மழை பெய்யும்போது, வானில் மின்னல் தோன்றும்.  இந்த மின்னல் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
பகிர்:


மழை பெய்யும்போது, வானில் மின்னல் தோன்றும். இந்த மின்னல் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு மின்னல் கீற்றின் வெப்பமானது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.

மின்னிக் கொண்டிருக்கும்போது வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது.

வீசும் காற்றில் மின்னல் மிதந்துவரும். ஆகவே, ஜன்னல்களை மூடிவிடுவது நன்று.

மின்னல் தாக்கும்போது மாடியிலிருந்து வரும் உலோகக் குழாய், உலோகப் பொருள்களைத் தொட வேண்டாம்.

போன், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நன்று.

கட்சிக் கொடிக்கம்பங்கள், உலோக வேலிகள், மரங்கள் அருகே நிற்க வேண்டாம்.

வெளியே செல்லும்போது மின்னல் மின்னினால் ஏதாவது ஒரு வீட்டினுள் அங்கிருப்போரின் அனுமதியுடன் ஒதுங்க முயற்சி செய்யுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.