தெரியுமா?
ஈரான் நாட்டில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் முறையில், "ஈரான்' எனும் பத்திரிகை "பார்சி' மொழியில் வெளியிடப்படுகிறது.
Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 9:55 PM
ஈரான் நாட்டில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் முறையில், "ஈரான்' எனும் பத்திரிகை "பார்சி' மொழியில் வெளியிடப்படுகிறது. இந்தப் பத்திரிகையை பார்வையற்றவர்களே விநியோகம் செய்கின்றனர்.
தற்காலத்தில் வாகனங்களில் ஸ்டெப்னி எனப்படும் மாற்றுச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. வண்டியின் அச்சு முறிந்துவிட்டால், அதற்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்காக "சேம அச்சு' கொண்டு செல்லப்பட்டதாக "புறநானூறு' 102-ஆவது பாடல் குறிப்பிடுகிறது.
Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 9:56 PM
ராமாயணத்தை கம்பரும், மகாபாரதத்தை வில்லிப்புத்தூராரும் தமிழில் பாடியதை அறிவோம். அதோல், ஸ்ரீமத் பாகவத புராணத்தை தமிழில் வேம்பத்தூர் செவ்வை சூடுவார் இயற்றியுள்ளார்.
Advertisement