கம்பரும் கண்ணதாசனும்...!
சென்னை கடற்கரையில் நிறுவப்பட்ட காமராஜர் சிலையின் பீடத்தில் பொறிக்க கம்பரின் கவிதை ஒன்றை எழுதித் தருமாறு
சென்னை கடற்கரையில் நிறுவப்பட்ட காமராஜர் சிலையின் பீடத்தில் பொறிக்க கம்பரின் கவிதை ஒன்றை எழுதித் தருமாறு கண்ணதாசனிடம் சிலை அமைப்புக் குழுவினர் கேட்டனர். அப்போது, அவர்கள் கண்ணதாசனிடமும் கவிதை ஒன்றை கேட்டனர். இவை இரண்டும் இப்போதும் அந்தப் பீடத்தில் அழியாத நிலையில் உள்ளன.
கம்பரின் கவிதை:
''நந்தா விளக்கணையா நாயகனே! நா நிலத்தார்
நந்தாய் தனி அறத்தின் தாயே! தயாநிலையே!
எந்தாய் இகல் வேந்தர்ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி வாய்மைக்கு ஆர்உளரே மற்றுலகில்!''
கண்ணதாசன் கவிதை:
''வாரா விடுதலையை வரவழைத்தாய்; வளரறிவில்
தேரா இளைஞர் நலம் தேர்ந்தாய்; எஞ் ஞான்றும்
ஊரார் நலம் காக்க உடல் நலத்தைத் தானிழந்தாய்
சீராகும் தலைவா! நின் திருமேனி தொழுகின்றோம்!
- தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.