அன்புடன் திகழ்!- பாப்பா
அறிவுடன் விளங்கு
பண்புடன் வாழ்- பாப்பா
பரிவுடன் நட!
உண்மையே பேசு- பாப்பா
உழைத்தே படி
நன்மையைச் செய்- பாப்பா
நற்பெயர் எடுத்திடு!
பாசம் காட்டிரு- பாப்பா
பாடம் படித்திடு
நேசம் கொண்டிரு- பாப்பா
நேர்மை காத்திடு!
ஒழுங்காய் வாழ்ந்திடு- பாப்பா
ஒழுக்கம் போற்றிடு
வாழ்வை வென்றிடு- பாப்பா
வரலாற்றைப் படைத்திடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.