செலுத்தும் உளியின் அழகினிலே
கல்லும் அழகாய் தெரிகிறது
சிற்பி அறிவுத் தெளிவினிலே
சிலையும் அழகுடன் சிரிக்கிறது!
-----
கல்லில் பலவகை உண்டாமே
சொல்லும் சுவை தர பேசுமாம்
நாத ஒளியும் கேட்குமாம்
நட்பாய் நலமுடன் சிரிக்குமாம்!
-----
வேத மந்திரம் ஓதியுமே
வியத்தகு சாதனை புரிவாரே
தோஷ மின்றி கடவுளென
கருவறை உள்ளே வைப்பாரே!
-----
திடமாய் திருப்பணி செய்வாரே
குடமுழுக்கு செய்ய மக்களையும்
ஒன்று சேர்த்து வைப்பாரே
இதுதான் ஆலயம் என்பாரே!
ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.