சிறுவர்மணி

எழுத்து, சொல்லில் பிழை நீக்கு...!

தப்பு தவறுகள் இல்லாமல், தாங்கும் கல்வியை எழுதி, படி;

தினமணி செய்திச் சேவை

தப்பு தவறுகள் இல்லாமல்,

தாங்கும் கல்வியை எழுதி, படி;

தப்பு தவறுடன் எழுதுவதால்

பொருளில் குற்றம் வந்துவிடும்!

'நீறு' என்றே எழுதுகையில்

நெற்றியில் 'திருநீறு' என்பதுதான்,

'நீர்' என்றே எழுதிப் பார்;

குடிக்கும் நீரைக் கொண்டுவரும்!

'சிகப்பு' என்று எழுதாதே;

சொற்பொருள் பிழையைக் கொண்டுவரும்;

'சிவப்பு' என்று எழுதிப் பார்

சரியாய் 'வண்ணம்' அது குறிக்கும்!

'விபரம்' என்பதும் பெரும் தவறு;

'விவரம்' என்பதே விவரிக்கும்

'சுவரில்' என்றே எழுதுவது,

சொந்த அறிவை அழகாக்கும்!

'சுவற்றில்' என்று எழுதுவது

சிந்தனை இல்லா செயலாகும்!

'புத்தகம்' என்பது புதுவீடாகும்;

பொத்திமூடி, பொத்தி, திறப்பதால்;

பொத்தகம் என்பதே சரியாகும்,

புரிந்து படிநீ புலமை வரும்!

இத்தனை விளக்கமும் மனதில் கொள்,

மறதி வராமல் கற்றுக் கொள்;

பத்துத் தலைமுறைப் புகழ் கிடைக்கும்;

பைந்தமிழ் உனக்கு வாழ்த்துரைக்கும்!

-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

24 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

ஜன. 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த டேரில் மிட்செல்!

குறள் படித்தால் குவலயம் ஆளலாம்!

“திமுக கூட்டணி சரியாக இல்லை!” தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

SCROLL FOR NEXT