ஞாயிறு கொண்டாட்டம்

மனசெல்லாம் மயில் தோகை!

"நடிக்கணும்னு ஆசை எனக்கு ஒரு நாளும் இருந்ததில்லை. ஆசை வந்த போது சினிமாவில் நிச்சயம் நாம்  பேசப்படனும்னு முடிவு பண்ணி விட்டேன். "காஞ்சிவரம்' என்னை சினிமா தெரிந்தவர்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டது.

ஜி. அசோக்

"நடிக்கணும்னு ஆசை எனக்கு ஒரு நாளும் இருந்ததில்லை. ஆசை வந்த போது சினிமாவில் நிச்சயம் நாம்  பேசப்படனும்னு முடிவு பண்ணி விட்டேன். "காஞ்சிவரம்' என்னை சினிமா தெரிந்தவர்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டது. இனி சினிமாவை சாதாரணமாக ரசிக்கும் ரசிகனிடம் என்னை நானே கொண்டு போய் சேர்க்க எண்ணியுள்ளேன். அதுக்குதான் மயிலுனு ஒரு படம் உருவாகிட்டு இருக்கு'' என்று கண்களில் ஆர்வம் தேக்கிப் பேசுகிறார் ஷம்மு. இயல்பாகத் தெரிவது முகம் மட்டுமல்ல; பழக்கவழக்கங்களும்! வாசலுக்கு வந்து வரவேற்றது போலவே வழியனுப்பவும் செய்கிறார்.

"காஞ்சிவர'த்தில் அசத்திட்டீங்களே?

"காஞ்சிவரம்' என் சினிமா வாழ்க்கையில் முக்கிய தருணம். ஒரு புது நடிகைக்கு இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைப்பது அரிது. எல்லோரும் சினிமாவில் பெயர் சொல்லும் படி ஏதாவது செய்ய வேண்டும் என ஓடிக் கொண்டிருக்கும் போது, எனக்கு "காஞ்சிவரம்' தானாக தேடி வந்தது. இயக்குநர் ப்ரியதர்ஷன் "ஒரு புதுமுகம் வேண்டும்' எனக் கேட்டபோது பிரகாஷ்ராஜ்தான் என்னை அறிமுகப்படுத்தி பேசியிருக்கிறார். கமல்ஹாசனின் "தசாவதார'த்தில் சின்ன கேரக்டரில் வந்து போனேன். அதன் பிறகு "மயிலு' படத்தில்தான் நான் முதன் முதலாக ஒப்பந்தமானேன். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை காட்டித்தான் என்னை சிபாரிசு செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். படம் உருவாகும் போதே நிச் சயம் இந்தப் படம் பேசப்படும்  எனத் தோன்றியது. அது      இப்போது நடந்திருக்கிறது.  பிரியதர்ஷன், பிரகாஷ்ராஜ், சாபுசிரில் என சினிமாவிலே சுழன்றுக் கொண்டிருக்கிற மனிதர் களோடு வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. தேசிய விருது கிடைத்தவுடன் ப்ரியதர்ஷன் அழைத்து நன்றி சொல்லி நெகிழ வைத்தார். பிரகாஷ்ராஜ் மகிழ்ச்சியான தருணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் "காஞ்சிவரம்'தான் என் அடையாளம்.

"மலையன்' படத்தில் துரு துரு பெண்ணாக வந்து போனீர்களே, எல்லா விதமான கேரக்டர்களும் செய்ய கமல் சார்கிட்ட ட்யூசன் எதுவும் போனீங்களா?



நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் கமல் சார்தான் எனக்கு ரோல் மாடல். "தசாவதாரம்' முடிந்த பின்னர் ""நல்லா நடிச்சிருக்க தொடர்ந்து நல்ல படங்களா பண்ணுங்கள்'' என கமல் சார் சொன்னது எனக்கான பொக்கிஷப் பாராட்டு. சினிமாவில் நாளுக்கு நாள் ஏதாவது செய்து கொண்டிருக்கும் கமலின் பெரிய விசிறி நான். அவருடைய படங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். "சலங்கை ஓலி' படம் இப்போது வரைக்கும் பார்க்கும் படம். "தசாவதாரம்' வாய்ப்பு கிடைத்த போதே மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் போதே வெயிட்டை குறைச்சா வெளுத்து வாங்கலாம்னு செட்ல என்னை சுத்தி முணுமுணுத்தாங்க. அப்ப அதோட சீரியஸ்சென்ஸ் புரியலை. "காஞ்சிவர'த்தின் போது புரிந்ததால் வொர்க் அவுட் ஆகிவிட்டது. "மலையன்' என்னை வேறு ஒரு பெண்ணாக அடையாளம் காட்டியிருக்கிறது.

தமிழைத் தவிர தெலுங்கு சினிமாவுக்கும் போறீங்களா?

நெய்வேலிதான் என் ஊர். "காஞ்சிவர'த்தில்

கிராமத்துப் பெண்ணாக வந்து போனதற்கு நெய்வேலியும் அங்கு பார்த்த மனிதர்களின் வாழ்க்கையும் ஒரு காரணம். பின்னர் அமெரிக்காவுக்குப் படிக்க போய் விட்டேன்.

அப்பாவும் அம்மாவும் நெய்வேலிகாரர்கள்தான். நெய்வேலி என்.எல்.சி.யில் வேலை பார்த்த போது "லவ்' பண்ணி மேரேஜ் செய்து கொண்டவர்கள். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என அரை டஜன் மொழிகள் பேசுவேன். காஞ்சிவரத்தை பார்த்த சில தெலுங்கு இயக்குநர்கள் கதைகளை சொன்னார்கள். அதில் பிடித்த இரண்டு கதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். தெலுங்கில் பெரிய படமாக அது இருக்கும். தமிழிலும் பெரிய ஸ்டார்களின் படங்களில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. என் அடுத்த பயணம் தெலுங்கு சினிமா நோக்கி பயணிக்கிறது.

"மயிலு' எப்படி வருது?

நிச்சயமா "மயிலு' ஒவ்வொரு நடிகைக்கும் கனவாக இருக்கும். படம் வந்த பின் இது மாதிரி ஒரு கதையில் நடித்து விட வேண்டும் என நிறைய பேர் நடிக்க கிளம்ப போகிறார்கள்.

பிரகாஷ்ராஜ் சார்தான் தயாரிக்கிறார். வித்தியாசமான பயணத்தை இந்த சினிமா எனக்கு வழங்க போகிறது. இந்த சினிமாவுக்குப் பின் என் சினிமா அடையாளம் கொஞ்சம் தனித்து தெரியும்.அதுக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்து வருகிறேன். பிரகாஷ்ராஜ் என்ற சினிமா நேசனுக்கு அந்த சினிமா மணி மகுடமாக இருக்கும். பிரகாஷ்ராஜ்க்காக நானும் உழைத்து வருகிறேன். மனம் முழுவதும் மயில் இறகால் வருடியதுபோல் இருக்கிறது இந்த "மயிலு' அனுபவம்.

படங்கள்:பி.ராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT