நவராத்திரி பண்டிகையை பாசிப் பருப்பு பாயசம் செய்து கொண்டாடுங்கள்.
தேவையானவை: பாசிப் பருப்பு 250 கிராம். வெல்லம் 250 கிராம். தேங்காய் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். நெய் தேவையான அளவு. முந்திரி, ஏலக்காய் தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் பாசிப் பருப்பை நன்கு வறுக்கவும். அதன்பின்
தேவைக்கேற்ப நீரை ஒரு பாத்திரத் தில் ஊற்றி அதில் பாசிப் பருப்பை வேகவைக்கவும். நன்றாக பருப்பு வெந்தவுடன் ஏலக்காய், வெல்லத்தை அதில் சிறிது சிறிதாகப் போட்டு கரண்டியால் கிளறிவிடவும். வாணலி யில் முந்திரியையும், தேங்காயையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள் ளவும். இதனை சூடாகக் கொதித்துக் கொண்டிருக்கும் பாசிப் பருப்பு பாயசத் தில் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டால் சூடான பாசிப் பருப்பு பாயசம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.