ஞாயிறு கொண்டாட்டம்

கல்லூரிக்குள் குடும்பங்களின் சங்கமம்!

எந்த ஒரு கல்லூரி நிர்வாகத்துக்கும் மாணவர்கள் மிக முக்கியமானவர்கள். அதற்கடுத்து அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள். கல்லூரிக் கட்டடம் என்றதும் நம் நினைவுக்கு வருவது இவர்கள்தான். ஆனால் ஆய்வுக்கூட பணியாளர்

ஆர். வேல்முருகன்

எந்த ஒரு கல்லூரி நிர்வாகத்துக்கும் மாணவர்கள் மிக முக்கியமானவர்கள். அதற்கடுத்து அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள். கல்லூரிக் கட்டடம் என்றதும் நம் நினைவுக்கு வருவது இவர்கள்தான்.

ஆனால் ஆய்வுக்கூட பணியாளர்கள், அட்டண்டர்கள், காவலர்கள், சுத்தப்படுத்துபவர்கள் என்று கல்லூரியின் மற்ற அங்கத்தினர்களை யாரும் யோசிப்பதில்லை. அவர்களை மட்டுமின்றி அவர்கள் குடும்ப அங்கத்தினர்களையும் அழைத்து ஆண்டுதோறும் கெüரவித்து வருகிறது ஒரு கல்வி நிறுவனம்.

ஒரு கல்லூரியென்றால் பல துறைகள் இருக்கும். ஒவ்வொரு துறைக்குள் இருப்பவர்கள் மட்டும் நெருங்கிப் பழகும் வாய்ப்பிருக்கும். ஆனால் பிற துறையினரிடமோ அல்லது மற்றவர்களின் குடும்பத்தினரிடமோ பழகும் வாய்ப்பு சுத்தமாக இருக்காது. எங்காவது, எப்போதாவது குடும்பத்தினருடன் சந்தித்தால் மட்டுமே அக்குடும்பங்களுக்குள்  அறிமுகம் இருப்பது தெரியும். அந்த அறிமுகம் அத்தோடு முடிந்துவிடும். ஆனால் ஒரு கல்லூரியின் துப்புரவுப் பணியாளர்கள் முதல் நிர்வாகத்தினர் வரை குடும்பத்துடன் சந்தித்துச் சங்கமித்து அறிமுகப் படுத்திக் கொள்வதென்றால்...?

இப்படியொரு நிகழ்ச்சி 4 இளைஞர்களால் நடத்தப்படும் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் இரண்டாவது முறையாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேறியது.

இந்த நோக்கம் குறித்துக் கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடேஷ். செயலர் டி.சேதுபதி, துணைத் தலைவர் எம்.ஏ. விஜயமோகன் ஆகியோர் தரப்பில், முதன்மை இயக்குநர் மு.சேட்டு நம்மிடம் பேசினார்.

""கல்லூரி துவங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. துவக்கத்தில் 37 மாணவர்கள் இருந்த இடத்தில் இப்போது 2750 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பேராசிரியர்களுக்கு ஆண்டுக்கொரு முறை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் பேராசிரியர்கள் சிறப்பாகப் பணிபுரியத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்று யோசித்ததன் விளைவுதான் கல்லூரிச் "சங்கமம்' நிகழ்ச்சி.

ஒரு துறையில் பணிபுரிபவர்களின் குடும்பத்தினருக்கு இடையில் கண்டிப்பாகச் சிறு அறிமுகமாவது இருக்கும். ஆனால் மற்ற துறைகளில் பணிபுரிவோருக்கு இடையில் பெரும்பாலும் அறிமுகம் இருக்காது. மேலும் கல்லூரியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் முதல் நிர்வாகத்தினர் வரை அனைவரையும் தாய், தந்தை மற்றும் குடும்பத்துடன் வரவழைத்து அறிமுகப்படுத்தி உறவை வலுப்படுத்தத்தான் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெற்றோருக்கு அறிமுகம் இருந்தாலும் அடுத்த தலைமுறையினருக்குச் சுத்தமாக அறிமுகம் இருக்காது. ஆனால் இவ்விழாவுக்கு வந்தபோதுதான் பெற்றோர் அறிமுகம் இருந்தது தெரியவந்தது.  இந்தச் சங்கமத்தைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அறிமுகம் மட்டுமில்லாமல் கண்களுக்கு விருந்து படைக்க மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மேஜிக் ஷோவும் நடத்துவோம். வழக்கமாக ஒவ்வொரு கல்லூரியிலும் ஆண்டுவிழா நடைபெறும். அதில் மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் அதைக் கண்டுகளிக்க அந்த மாணவர்களின் பெற்றோரோ, அவர்களின் குடும்பத்தினரோ அங்கு இருக்க மாட்டார்கள். இந்தச் சங்கமம் விழா அந்தக் குறையைப் போக்குவதாக இருக்கிறது. குழந்தைகளின் குதூகலக் கொண்டாட்டத்துடன் அறுசுவை உணவும் அளித்து விழாவை நடத்துகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT