பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கரப்பரில் தாம்பூல சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு கறுத்துப் போன வெள்ளிப் பாத்திரம், பூஜை சாமான்களையெல்லாம் அழுத்தித் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் காரணமாக துலக்கி வைக்கும் பாத்திரங்கள் வெள்ளைப் பூத்துப் போகிறதா? பாத்திரங்களை உப்புத் தண்ணீரில் கழுவிய பிறகு ஒரு சிறிய வாளியில் நல்ல தண்ணீரை வைத்து அதில் முக்கி எடுத்துவிடுங்கள்.
பித்தளைப் பாத்திரங்களை கழுவிய பிறகு, தோல் சீவிய உருளைக்கிழங்கை பாத்திரத்தின் மீது தேய்த்துப் பாருங்கள். புதுசு போல மின்னும்.
தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடா கொஞ்சம் அலுமினியம் பாயில் ஆகியவற்றோடு வெள்ளிப் பொருள்களைப் போட்டு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் துடைத்தால் வெள்ளிப்பொருள்கள் பளிச்சென்று இருக்கும்.
பால் பாத்திரம் தீய்ந்துவிட்டதா? பாத்திரம் வீண் என்று நினைக்க வேண்டாம். சிறிதளவு வெங்காயத்தை அந்தப் பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டால் தீய்ந்த கறை போய்விடும்.
பாத்திரங்களைக் கழுவும் நீரில் அவ்வப்போது கொஞ்சம் வினிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.