முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குடும்பத்தோடு "நோக்கியா'வுக்கு விசிட்!

 நவநாகரிக உலகத்தில் செல்போன் என்பது மனிதனின் உற்ற நண்பனாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் ஒருவர் அதிக நாள்களுக்கு ஒரே செல்போனை வைத்திருப்பதுமில்லை. இந்நிலையில், ந

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

 நவநாகரிக உலகத்தில் செல்போன் என்பது மனிதனின் உற்ற நண்பனாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் ஒருவர் அதிக நாள்களுக்கு ஒரே செல்போனை வைத்திருப்பதுமில்லை. இந்நிலையில், நாளுக்குநாள் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 அந்த வகையில் செல்போன் நிறுவனங்களில் நோக்கியா குறிப்பிடத்தக்க நிறுவனமாகும். சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் நோக்கியா தொழிற்சாலையில் பெண் ஊழியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என அறிந்து, தொழிற்சாலைக்கு ஒரு விசிட் அடித்தோம்:
 
 பல்வேறு சோதனைகளுக்குப் பின்பு சென்னை நோக்கியா தொழிற்சாலையின் செயல் இயக்குநர் பிரகாஷ் கதமாவைச் சந்தித்தபோது,""2006-ம் ஆண்டில் வெறும் 2,000 ஊழியர்களைக் கொண்டு நோக்கியா செயல்படத் தொடங்கியது. உதிரி பாகங்களைக் கொண்டு செல்போன்களை பொருத்தும் பணியில் தற்போது சுமார் 9,000 பேர் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி உதிரி பாகங்கள் தயாரிப்பு, வேலை நேரப் பாதுகாப்பு, ஊழியர்களின் சுகாதாரம், உடல்நலம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துறை இயங்குகிறது. இந்த வளாகத்தில் மட்டும் சுமார் 50,000 பேர் வேலை பார்க்கின்றனர். இதில் 55 சதவீதம் பேர் பெண்கள்'' என்றார் அவர்.
 கர்ப்பிணிகள்... இங்கு வேலை பார்க்கும் கர்ப்பிணிகளுக்கு இரவு வேலை கிடையாது. கைக்குழந்தைகளுடன் வேலைக்கு வரும் பெண்களுக்கென்று குழந்தைகள் காப்பகம் ஒன்று தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளது. பிரபல நிறுவனத்தால் இந்த குழந்தைகள் காப்பகம் செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கட்டணமும் இல்லை. இடையில் தங்கள் குழந்தைகளைச் சென்று பார்ப்பதற்கும், உணவூட்டுவதற்கும் அனுமதி உண்டு.
 கைத்தொழில்கள்... வேலை நேரம் போக அதிக வருமானம் ஈட்டும் வகையில் அழகுக்கலை பயிற்சி, கைத்தொழில்கள் போன்றவையும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஒருவேளை நோக்கியா நிறுவன வேலையிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இந்தக் கைத்தொழில்களால் பெண்கள் பயனடைய முடியும் என்ற நோக்கத்தில் இவை கற்றுக்கொடுக்கப்படுகிறது. கைத்தொழில்கள் மூலம் உருவாக்கப்படும் பொருள்களை நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தால் தொழிற்சாலையின் அருகில் இருக்கும் அனாதை ஆசிரமங்கள், குழந்தைகள் காப்பகம் உள்ளிட்டவற்றுக்கு உதவியும் வருகின்றனர்.
 குடும்பத்தினர் "விசிட்'... பெண்களை இரவு, பகலாக வேலைக்கு அனுப்பும் குடும்பத்தினருக்கு மனதிற்குள் ஒரு பயம் இருக்கலாம். இதைப் போக்கும் விதத்தில் குடும்ப உறுப்பினர்களை ஒருநாள் அழைத்து வந்து தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காட்ட வசதி செய்யப்
 பட்டுள்ளது.
 புதுமணத் தம்பதி "விசிட்'... புதிதாக திருமணமாணவர்களும் தங்கள் மனைவி அல்லது கணவனை இங்கு அழைத்து வரலாம். அவர்களுக்கென்று கவுன்சிலிங், விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
 பட்டதாரி பெண்கள்... பள்ளிப் படிப்போடு வேலைக்குச் சேர்ந்த பல பெண்கள் இன்று பட்டதாரிகளாக மாறியுள்ளனர். சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயர்கல்வியைப் பெற்றுள்ளனர்.
 ""நான் என் குடும்ப சூழல் காரணமாக பிளஸ் டூ முடித்துவிட்டு இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். இங்கு வழங்கப்பட்ட கல்வி உதவி திட்டத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. கணிதம் படித்து முடித்து இப்போது எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுவிட்டேன். நிறுவனத்தின் மூலம் எனக்கு நிதி உதவியும் கிடைக்கப் பெற்றேன். என்னைப் போன்று கிராமங்களில் இருந்து வேலைக்கு வந்த பல பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளோம்'' என்கிறார் அங்கு வேலை பார்க்கும் மலர்க்கொடி.

முழு கட்டுரையைப் படிக்க →