ஞாயிறு கொண்டாட்டம்

பெண்ணை வர்ணிக்கும் கவிஞர்

கூந்தல் பற்றி... கரிய நுரை போல பொங்கித் ததும்பும் கூந்தலில் நெற்றிச் சுட்டியை ஏன் வைக்கிறாய்? அதன் பாரம் தாங்காமல் உன் கூந்தல் நொறுங்கிவிடப் போகிறது.  குரல்... உன் சங்குக் கழுத்தில் ஆரத்தை ஏன் இறுக்கு

தினமணி

கூந்தல் பற்றி... கரிய நுரை போல பொங்கித் ததும்பும் கூந்தலில் நெற்றிச் சுட்டியை ஏன் வைக்கிறாய்? அதன் பாரம் தாங்காமல் உன் கூந்தல் நொறுங்கிவிடப் போகிறது.

 குரல்... உன் சங்குக் கழுத்தில் ஆரத்தை ஏன் இறுக்குகிறாய்? உன்னுடைய அமுதம் போன்ற குரல் அடைப்பட்டுவிடப் போகிறது.

 விரல்கள்... உன்னுடைய தாமரை போன்ற விரல்களில் மோதிரம் ஏன் அணிகிறாய்? அதன் சுமை தாங்காமல் உன் விரல்கள் கழன்று விழுந்துவிடப் போகின்றன.

 அழகு... உன்னுடைய தந்தக் கால்களில் கொலுசு ஏன் மாட்டுகிறாய்? அதனால் ஒரு சிறைக் கைதி போல் உன் அழகு கேவலப்படப் போகிறது.

 சிரிப்பு... உன்னுடைய கால் விரல்களில் மெட்டியை ஏன் சேர்க்கிறாய்? அதனால் உன் சிரிப்பொலி தன் பெருமையை இழந்துவிடப்

 போகிறது?

 கவிஞர் தன் கவிதையில்,

 "என் அலங்காரமே

 நீ ஏன் இப்படி உன்னை

 அலங்கரித்துக் கொள்கிறாய்?'

 காதலியின் இயற்கை அழகே உன்னதமானது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

 ("சங்கம் ஓவிய உரை'

 எனும் நூலிலிருந்து திரட்டியவை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT