முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சமையல்: வெந்தயக் கீரை வடை

வெந்தயக் கீரை, கோதுமை மாவு, கடலை மாவு, எண்ணெய், விழுதாக அரைத்த பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும்.

Updated On : 15 பிப்ரவரி, 2013 at 10:42 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:57 PM

தேவையானவை:

வெந்தயக் கீரை - 200 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10
கொத்துமல்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
ரவை - 50 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

Advertisement

வெந்தயக் கீரை, கோதுமை மாவு, கடலை மாவு, எண்ணெய், விழுதாக அரைத்த பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். இட்லியை வேக வைப்பதைப் போல அரை மணி நேரம் ஆவியில் வேக வைக்க வேண்டும். வெந்ததை ஆற வைக்க வேண்டும். இளஞ்சூடாக இருக்கும்போது கொஞ்சம் ரவையில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கூரான கத்தியால் அரை அங்குல பருமனான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். சூடான எண்ணெயில் இந்தத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தால் சுவையான வெந்தயக்கீரை வடை ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.